டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சாதனையை படைத்தார் ரோஹித் சர்மா..

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டாவது கிரிக்கெட் டெஸ்டில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா புதிய சாதனை படைத்துள்ளார். இரண்டாவது இன்னிங்சில் ரோஹித் 57 ரன்கள் எடுத்தார். இதன் மூலம், சர்வதேச போட்டிகளில் தொடர்ந்து அதிக இன்னிங்சில் இரட்டை இலக்க ஸ்கோரை அடித்த பேட்ஸ்மேன் என்ற சாதனையை வீரர் கைப்பற்றியுள்ளார்.

ரோஹித் தொடர்ந்து 30 இன்னிங்ஸ்களில் 10 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார். தொடர்ந்து 29 இன்னிங்ஸ்களில் இரட்டை இலக்க ரன்களை அடித்த இலங்கையின் மஹேலா ஜெயவர்த்தனேவின் சாதனையை ரோஹித் முறியடித்தார். லென் ஹட்டன் (25), ரோஹன் கன்ஹாய் (25), ஏபி டி வில்லியர்ஸ் (24) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

கடைசி 30 இன்னிங்ஸில் ரோஹித் சர்மாவின் ஸ்கோர் :

12, 161, 26, 66, 25*, 49, 34, 30, 36, 12*, 83, 21, 19, 59, 11, 127, 29, 15, 46, 120, 32, 31, 12, 12, 35, 15, 43, 103, 80, 57*  .

2வது டெஸ்டின் நிலை :

இரண்டாவது டெஸ்டின் நான்காம் நாள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 2வது இன்னிங்சில் 2 விக்கெட் இழப்புக்கு 76 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணி 365 என்ற இலக்கை நிர்ணயித்துள்ளது. கடைசி நாளில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 289 ரன்கள் தேவை. முன்னதாக, முதல் இன்னிங்சில் இந்திய அணி 438 ரன்கள் குவித்தது.. இந்தியா இரண்டாவது இன்னிங்ஸில் விரைவான ரன்களை எடுத்து டிக்ளேர் செய்தது. ரோகித் சர்மா (57), இஷான் கிஷன் (52*), யஷஸ்வி ஜெய்ஸ்வால் (38), ஷுப்மான் கில் (29*) ஆகியோரின் ரன்களால் 24 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 181 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.