முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக் ஹஸ்ஸி, வரவிருக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் வாய்ப்பு அதிகம் என்பது குறித்து தனது கணிப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

ஒருநாள் போட்டிகளின் சாம்பியனைத் தீர்மானிக்கும் ஒருநாள் 2023 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் 5ஆம் தேதி தொடங்குகிறது. இந்த உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 5ம் தேதி முதல் நவம்பர் 19ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த முறை உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற இருப்பதால் இந்த தொடரின் மீது அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்காக ஒவ்வொரு அணியும் மிக தீவிரமாக தயாராகி வருகின்றன. உலகக் கோப்பை தொடர் மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில்,  இந்த உலக கோப்பை கிரிக்கெட் தொடர் குறித்து பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் தங்களது கருத்து மற்றும் கணிப்புகளை வெளிப்படையாகவே தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், வரும் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் குறித்து பல்வேறு விஷயங்களை பேசி வரும் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மைக் ஹஸ்ஸி, எந்த அணி சாம்பியன் பட்டம் வெல்ல வாய்ப்புள்ளது என்பது குறித்து தனது கணிப்பை வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார்.

அந்த வகையில், வரும் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் குறித்து பல்வேறு விஷயங்களை பேசி வரும் ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக் ஹஸ்ஸி, எந்த அணிக்கு சாம்பியன் பட்டம் வெல்ல வாய்ப்பு இருக்கிறது என்பது குறித்து தனது கணிப்பை வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய மைக் ஹஸ்ஸி, “உலக கோப்பையை  கைப்பற்றும் வாய்ப்பு ஆஸ்திரேலிய அணிக்கு தான் அதிகம் இருக்கிறது என நான் பார்க்கிறேன்.  அனைத்து அம்சங்களிலும் ஆஸ்திரேலியா வலுவான அணி. சமீபகாலமாகவே  ஆஸ்திரேலிய அணி சிறப்பான முறையில் கிரிக்கெட்டை வெளிப்படுத்தி வருகிறது. தற்போதைய நிலையில் ஆஸ்திரேலிய அணியிலிருக்கும் ஒவ்வொரு வீரருக்கும் அவர்களின் பணி என்னவென்று நன்றாக தெரியும், இது ஆஸ்திரேலிய அணியின் மிகப்பெரிய பலமாக நான்பார்க்கிறேன் என்றார்.

மேலும் உலகக் கோப்பை  தொடர் இந்தியாவில் நடைபெறுவதும் ஆஸ்திரேலிய அணிக்கு சாதகமான விஷயம், இந்திய ஆடுகளங்கள் ஆஸ்திரேலிய அணிக்கு சாதகமாக உள்ளன. அதேபோல், உலகக் கோப்பை போன்ற பெரிய தொடர்களில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்துவது எவ்வளவு கடினம் என்பது அனைவருக்கும் தெரியும்,” என்றார்.