கேரளா மாநிலத்தில் ஸ்மார்ட் கார்டு ஓட்டுநர் உரிமத்தை அறிமுகப்படுத்துவதற்கு அம்மாநில  அரசு தயாராகி கொண்டு வருகிறது. அதன்படி திருவனந்தபுரம், குடப்பனகுன்னு, கோழிக்கோடு மற்றும் வயநாடு ஆகிய இடங்களில் உள்ள மோட்டார் வாகனத் துறை அலுவலகங்களில் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்ட இந்த அமைப்பானது கூடிய விரைவில் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய நடவடிக்கையின் மூலம், ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு லேமினேட் செய்யப்பட்ட உரிமங்களுக்கு பதிலாக ஸ்மார்ட் கார்டு உரிமம் வழங்கப்படும். இருப்பினும், தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக, கேரளா உட்பட பல மாநிலங்கள் சிப் இல்லாத அட்டைகளைத் தேர்வு செய்ய முடிவு செய்துள்ளன.