காலாண்டு வரி உயர்வு, ஆன்லைனில் அபராதம் விதிப்பதை ரத்து செய்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நவ.9ஆம் தேதி மாநிலம் தழுவிய ஒருநாள் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இந்த போராட்ட அறிவிப்பால் உள்ளூர் வெளிமாநிலங்களில் இருந்து வரும் காய்கறி, உணவு பொருட்கள், துணி பொருட்கள் உள்ளிட்டவை கடுமையாக பாதிக்கப்படும்.

இதனால் விலை உயரும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. காலவரையற்ற போராட்டத்தின் ஒரு பகுதியாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார லாரி உரிமையாளர்கள் நேற்று சென்னை, மணலி அருகே உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.