தமிழகத்தில் மக்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்க தமிழகத்திற்கான தொழில் முதலீடுகள் மற்றும் நிறுவனங்களை ஈர்ப்பதற்கு அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி கடந்த ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டு அதன் மூலம் 6,64,150 கோடி ரூபாய் காண முதலீடு மற்றும் 26,90,657 நபர்களுக்கான வேலை வாய்ப்புகள் கிடைப்பதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இதனை தொடர்ந்து தற்போது 1003 கோடி முதலீட்டில் 840 நபர்களுக்கு வேலை வழங்கும் வகையில் கார்நிங் இன்டர்நேஷனல் கார்ப்பரேஷன் மற்றும் இந்தியாவை சேர்ந்த ஆப்டிமஸ் இன்ஃப்ராக்காம் லிமிடெட் ஆகிய நிறுவனங்களுக்கு கூட்டு நிறுவனமான பாரத் இன்னோவேட்டிவ் கிளாஸ் டெக்னாலஜிஸ் பிரைவேட் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் மூலம் உலகத்தரம் வாய்ந்த மின்னணு சாதனங்களுக்கான கண்ணாடி பொருட்கள் உற்பத்தி செய்யப்படும். அந்த பொருட்கள் அனைத்தும் நாட்டிலேயே முதல்முறையாக Precision glass processing  தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.