தென்னிந்திய சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனராக திகழ்ந்து கொண்டிருக்கும் அட்லீ இயக்கத்தில் உருவான ஜவான் திரைப்படம் வசூல் சாதனையை படைத்துள்ளது. கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி வெளியான இந்த திரைப்படத்தில் ஷாருக்கான், நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதி உள்ளிட்ட பலரும் நடித்திருந்த நிலையில் இந்த திரைப்படம் இந்திய அளவில் அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையும் ஒரே நாளில் அதிக வசூல் செய்த அதாவது 156.80 கோடி வசூல் செய்த பெருமையையும் பெற்றுள்ளது.

இந்த நிலையில் இந்த திரைப்படம் எப்போது ஆயிரம் கோடி வசூல் செய்யும் என்று பலரும் எதிர்பார்த்து இருந்த நிலையில் அட்லி 1000 கோடி வசூல் செய்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பாலிவுட்டில் மாபெரும் சாதனை படைத்த அட்லிக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.