பெரும்பாலும் மக்கள் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் முதலீடு செய்து வருகிறார்கள். இந்த திட்டம் இந்தியாவில் மிகவும் பிரபலமான சிறு சேமிப்பு திட்டமாக கருதப்படுகிறது. இந்த திட்டத்தில் முதலீட்டாள ர்கள் குறைந்தபட்சமாக 500 வரையும், அதிகபட்சமாக  1.5 லட்சம் ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சில நேரங்களில் இந்த பிபிஎப் கணக்கு மூடப்பட்டு விடும். அதற்கு நிறைய காரணங்கள் இருக்கிறது. ஆனால் அதில் சில பிரச்சினைகளும் உள்ளது. ஒருவேளை கணக்கு மூடப்பட்டு விட்டால் அதை ஆக்டிவேட் செய்ய என்ன செய்ய வேண்டும் என்று குறித்து பார்க்கலாம்.

தொடங்கிய பிபிஎப் கணக்கை மீண்டும் ஆக்டிவேட் செய்வதற்கு தபால் அலுவலகம் அல்லது வங்கி கிளையை அணுக வேண்டும். அங்கு விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும். ppf கணக்கு எத்தனை வருடங்கள் மூடப்பட்டதோ அதற்கு 500 ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும். உதாரணமாக நான்கு வருடங்களாக மூடப்பட்டிருந்தால் 500 ரூபாயை நான்கால் பெருக்கினால் நீங்கள் 2000 ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும். இதனுடன் நீங்கள் ஒவ்வொரு வருடமும் 50 அபராதமும் செலுத்த வேண்டி இருக்கும். உங்கள் கணக்கின் 15 வருட லாகின்  காலம் ஏற்கனவே முடிந்துவிட்டால் கணக்கு மீண்டும் செயல்படுத்தப்படாது. அது தவிர செயலற்ற பிபிஎப் கணக்குகளை வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் தங்கள் பெயரை மற்றொரு கணக்கை திறக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.