தென்னிந்திய சினிமா அளவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா. இவர் இறுதியாக விஜய் தேவரகொண்டா உடன் இணைந்து குஷி திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் முகத்தை காட்ட முடியாமல் இருக்கிறேன் என்று நடிகை சமந்தா வேதனை தெரிவித்துள்ளார்.

அதாவது மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ள அவர் சிகிச்சைக்காக தற்போது அமெரிக்கா சென்று உள்ளார். சமீபத்தில் instagram லைவ் மூலமாக ரசிகர்களுடன் உரையாடிய போது பேசிய அவர், மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டிருப்பதால் அதிக அளவில் ஸ்டிராய்ட் எடுத்துக் கொள்கிறேன். இதனால் எனது முகத்தை காட்ட முடியாமல் பில்டர்களை உபயோகிக்கிறேன் என கூறியுள்ளார்.