நாடு முழுவதும் 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறப்படுவதாக  இந்திய ரிசர்வ் வங்கி சில மாதங்களுக்கு முன்பு அறிவித்திருந்தது. இதனால் பல கோடி ரூபாய் மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுக்கள் வங்கி அமைப்பிற்கு திரும்ப வந்துள்ளது. புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுகளில் 76 சதவீதம் திரும்ப வந்துவிட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது. இந்நிலையில் பொதுமக்கள் தங்களிடம் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்யலாம் அல்லது மாற்றிக் கொள்ளலாம். இதற்கான கடைசி தேதி செப்டம்பர் 30 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்களிடம் இருக்கும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை விரைவாக வங்கியில் வந்து மாற்றிக்கொள்ளுமாறு வங்கி அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். செப்படம்பர் 30 ஆம் தேதிக்கு பின் இந்த ரூபாய் நோட்டுகள் செல்லாது என்றும் திரும்பப்பெறுவதாகவும் மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. செப்டம்பர் 30 ஆம் தேதி வரை மக்கள் காத்திருக்காமல் விரைவாக மாறிக்கொள்ள வேண்டும் என்றும் ஒரே நேரத்தில் ஒருவர் பத்து 2 ஆயிரம் நோட்டுகளை (ரூ.20 ஆயிரம்) மாற்றிக்கொள்ளலாம் என வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.