மகா சிவராத்திரி பிப்ரவரி 18 ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இதில் சதுர்த்தசி திதி பிப்ரவரி 18ஆம் தேதி இரவு 8.02 மணிக்கு தொடங்க உள்ளது. இதனை அடுத்து பிப்ரவரி 19ஆம் தேதி மாலை 4:18 மணிக்கு முடிவடைய உள்ளது. மகா சிவராத்திரிக்கு விரதம் இருப்பவர்கள் பிப்ரவரி 18ஆம் தேதி அன்று மாலை விரதத்தை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை விரதத்தை முடிக்க வேண்டும். அது மட்டுமல்லாமல் பிப்ரவரி 18ஆம் தேதி பகல் முழுவதும் உறங்க கூடாது. அன்று இரவு முழுவதும் தூங்காமல் கோயில்களில் நான்கு கால பூஜைகளில் பங்கேற்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்ய முடியாதவர்கள் மூன்றாவது கால பூஜையில் கண்டிப்பாக கண் விழித்து சிவனை வணங்க வேண்டும். மேலும் பிப்ரவரி 19ஆம் தேதி மாலை 6:00 மணிக்கு மேல் சிவனை பூஜித்த பின் தூங்கலாம். இதனை தொடர்ந்து விரதம் இருப்பவர்கள் கோவிலுக்கு செல்வதற்கும் முன் மாலையில் இரண்டாவது முறையாக நீராடி கொள்ள வேண்டும். அதுமட்டுமல்லாமல் சிவராத்திரி அன்று சிவாலயங்கள் நடை சாத்தப்படாமல் திறந்திருக்கும்.

நான்கு கால சிவபூஜை செய்ய சிவராத்திரியின் முழு இரவையும் நான்காக பிரித்து கொள்வர்.

  1. முதல் பூஜை நேரம் – மாலை 06:13 மணி முதல் இரவு 09:24 மணி வரை
  2. இரண்டாவது பூஜை நேரம் – இரவு  09:24 மணி முதல் பிப்ரவரி 19ஆம் தேதி நள்ளிரவு 12:35 மணி வரை
  3. மூன்றாம் பூஜை நேரம் – பிப்ரவரி 19ஆம் தேதி நள்ளிரவு 12:35 மணி முதல்  அதிகாலை 03:46 மணி வரை
  4.  நான்காம் பூஜை நேரம் –  பிப்ரவரி 19ஆம் தேதி அதிகாலை 03:46 முதல் 06:56 வரை. இவ்வாறாக மகா சிவராத்திரி அன்று சிவனை வழிபடுவது வழக்கம்.