வருடம் தோறும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கப்பட்டு வருகிறது. கூட்டுறவு துறை அதிகாரிகள் மக்களோடு முதல்வர் முகாம் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் தாலுகா வாரியாக வழங்க வேண்டிய வேட்டி, சேலை எண்ணிக்கை குறித்த தகவல்கள் இறுதியாக வில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. விவரங்கள் கணக்கிடப்பட்ட பிறகுதான் பகுதி வாரியாக வினியோகம் செய்யப்பட்டு மக்களுக்கு விநியோகம் செய்யும் பணிகள் தொடங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுபோல கரும்பு கொள்முதல் பற்றிய அறிவிப்புகளையும் தமிழக அரசு இன்னும் வெளியிடவில்லை இறுதி நேரத்தில் கொள்முதல் செய்வது அனைவருக்கும் சிரமத்தை கொடுக்கும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 15 நாட்கள் மட்டுமே இருப்பதால் ரேஷன் கடைகளில் வழங்க இருக்கும் வேஷ்டி, சேலை கரும்பு ஒதுக்கீடு பணிகள் இன்னும் தொடங்கப்படாமல் உள்ளதால் மக்களுக்கு பலன்கள் சென்றடைய காலதாமதம் ஆகலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.