பெண்கள் தங்களின் எதிர்கால செலவுக்காக அஞ்சலக திட்டங்களில் அதிக அளவில் முதலீடு செய்து வருகிறார்கள். தபால் நிலையங்களில் ஏராளமான சேமிப்பு திட்டங்கள் பயன்பாட்டில் இருந்து. அதன் தொடர்ச்சியாக கடந்த ஏப்ரல் மாதம் பிரதமர் மோடி பெண்களுக்கு இரட்டிப்பு லாபம் தரும் வகையிலான மகிலா சம்மான் சேமிப்பு சான்றிதழ் என்ற திட்டத்தை அறிமுகம் செய்து வைத்தார். இந்த திட்டம் 2025 ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரை செல்லுபடி ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் ஆயிரம் ரூபாய் முதல் அதிகபட்சம் 2 லட்சம் ரூபாய் வரை டெபாசிட் செய்ய முடியும். 2025 ஆம் ஆண்டில் இந்த கணக்கு முதிர்ச்சி அடைந்த பிறகு 7.5 சதவீதம் பட்டு விகிதத்தில் டெபாசிட் செய்த தொகையும் திருப்பி வழங்கப்படும். இந்த கணக்கு வைத்திருப்பவர்கள் இறந்துவிட்டால் அல்லது நோய் உள்ளிட்ட காரணங்களால் பாதிக்கப்பட்டிருந்தால் கணக்கு முதிர்ச்சி அடைவதற்கு முன்பாகவே பணம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.