தமிழ்நாடு சார்நிலை நீதித்துறையில் உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க மே 27 நாளை கடைசி நாளாகும். இதில் ஓட்டுநர், அலுவலக உதவியாளர், தூய்மை பணியாளர், காவலர், நகல் பிரிவு உதவியாளர், இளநிலை மற்றும் முதுநிலை கட்டளை நிறைவேற்றுநர், மசால்ஜி உள்ளிட்ட 2311 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் www.mhc.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.