தமிழகத்தில் சட்டசபை தேர்தலில் வாக்குறுதியின் படி பகுதி நேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் வழங்கப்படும் என்றும் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு நேரடி பணி நியமனம் வழங்கப்படும் எனவும் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து ஆசிரியர்கள் போராட்டம் நடத்திய நிலையில் அவர்களின் கோரிக்கையை ஏற்காத நிலையில் தற்போது வரை கோரிக்கைகளை நிறைவேற்றும்படி அறிவுறுத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் அடுத்த மூன்று மாதத்திற்குள் ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ள நிலையில் அதற்கான நடவடிக்கைகள் தற்போது தீவிர படுத்தப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். அதே சமயம் ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகளும் நிறைவேற்றும் தருவாயில் இருப்பதாகவும் அமைச்சர் கூறியுள்ள நிலையில் ஆசிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.