தமிழகத்தில் ஒவ்வொரு சிறப்பு பண்டிகைகளின் போதும் மக்கள் அனைவரும் தங்கள் சொந்த ஊர் சென்று திரும்ப ஏதுவாக கூடுதல் விடுமுறைகள் அறிவிக்கப்படுவது வழக்கம். அவ்வகையில் தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்கள் சொந்த ஊர் செல்ல சமீபத்தில் சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டது. தற்போது போகி பண்டிகை,மாட்டுப் பொங்கல் மற்றும் திருவள்ளுவர் தினம் அரசு விடுமுறை தினங்கள் வருகின்றது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14 முதல் 17 வரை 4 நாட்கள் அரசு விடுமுறையாகும்.

இந்நிலையில் பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்வதற்கு ஏதுவாக ஜனவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளிலும்,முடித்துவிட்டு மீண்டும் திரும்ப ஏதுவாக ஜனவரி 18ஆம் தேதி புதன்கிழமையும் சிறப்பு விடுமுறை அளிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. அது குறித்து முதல்வர் கடலில் விரைவில் ஆலோசித்து மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.