இன்றைய காலகட்டத்தில் நாம் அன்றாட வாழ்க்கையில் அதிகம் கேட்கும் பயன்படுத்தும் வார்த்தையாக சங்கி என்ற சொல் மாறிவிட்டது என்று தான் கூற வேண்டும். இதற்கான அர்த்தம் என்ன என்பதை நாம் பலரும் யோசித்து இருப்போம். சங்கியின் முழு வரையறையும் அமைப்பு அல்லது சங்கம் ஆகும். இதற்கு முன்பு ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் சங்கத்தின் அங்கத்தினர்களை விவரிக்க சங்கி என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டது. இந்தக் குழு பாரதிய ஜனதா கட்சி பிற்காலத்தில் உருவானபோது அதற்கு மிகவும் ஆதரவாக இருந்தது. அதனால் பாஜக ஆதரவாளர்கள் சங்கி என்று அழைக்கப்பட்டனர்.