ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்க கைரேகை பதிவு அவசியம் இல்லை என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் எம்எல்ஏ சின்னதுரை எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், பொது விநியோகத் திட்டத்தை எளிமைப்படுத்தும் வகையில் கைரேகைகளை பெற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தமிழக ரேஷன் கடைகளில் அரிசி மற்றும் பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் விநியோகம் செய்யப்படுகின்றன. இந்த பொருட்களை பெற குடும்ப அட்டைதாரர்கள் கைரேகை பதிவு செய்வது அவசியம் இல்லை. ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு செய்யவில்லை என்றாலும் ரேஷன் அட்டை ரத்து செய்யப்படாது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.