இந்திய கிரிக்கெட் அணி உலக கோப்பையை வெல்லும் என்று ரசிகர்கள் மிகுந்த நம்பிக்கையோடு எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறார். போட்டியை காண ரசிகர்களும் ஆர்வம் காட்டி வருகிறது. இந்நிலையில்  ஆந்திர மாநிலம் எலூரைச் சேர்ந்த பிரபல நுண்கலைஞர் மெட்டாரா சுரேஷ் ஒரு சென்டிமீட்டர் நீளமுள்ள வெள்ளரி விதையைக் கொண்டு உலகக் கோப்பையை மினியேச்சர் வடிவில் உருவாக்கியுள்ளார்.

கிரிக்கெட் மீதான தனது காதலை வெளிப்படுத்தினார். வெள்ளரி விதையில் செய்யப்பட்டுள்ள உலக கோப்பையை பார்த்தவர்கள் பாராட்டி வருகின்றனர். இந்த முறை உலகக் கோப்பையை இந்தியா வெல்லும் என்று மைக்ரோ ஆர்ட்டிஸ்ட் நம்பிக்கை தெரிவித்தார்.