ஆடுகளத்தில் விக்கெட் வீழ்த்தும்போதும் சரி ரன்களை குவிக்கும் போதும் சரி KKR வீரர் சுனில் நரைன் மற்ற வீரர்களை போல உணர்வுகளை வெளிப்படுத்துவதில்லை. இதற்கான காரணத்தை நேர்காணல் ஒன்றில் கூறிய அவர், விளையாட்டில் தோல்வியுற்றவரின் மனதை காயப்படுத்தும் வகையில் வெற்றியை கொண்டாடக்கூடாது என்று என் தந்தை கூறி இருக்கிறார். அதனால்தான் ஆடுகளத்தில் உணர்வுகளை வெளிப்படுத்த மாட்டேன் என்று அவர் பலரையும் நெகிழ வைக்கும் வகையில் பேசி உள்ளார்.