‘எதிர்நீச்சல்’ தொடரில் ஆதி குணசேகரனாக நடித்து தமிழ்நாட்டு மக்களிடையே நீங்காத இடத்தை வந்த நடிகர் மாரிமுத்து சமீபத்தில் மாரடைப்பால் காலமானார். இவரது மரணம் சின்னத்திரை மற்றும் சினிமா ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் எதிர்நீச்சல் சீரியலில் இவர் நடித்து வந்த ஆதி குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் யார் அடுத்து நடிப்பார் என்று கேள்வி எழுப்பப்பட்டு வந்த நிலையில் ஆதிகுணசேகரன் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர்கள் வேல.ராமமூர்த்தி, இளவரசு, அழகம் பெருமாள் உள்ளிட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இன்னும் சில நாட்களில் யார் என்பது முடிவாகிவிடும் என தெரிகிறது.