நாடு முழுவதும் ஏழை, எளிய மக்கள் ரேஷன் கார்டு மூலமாக பல சலுகைகளை பெற்று வருகிறார்கள். மேலும் இலவச ரேஷன் பொருட்களும் இதன் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்தோதயா அட்டைதாரகளுக்கு இலவச மருத்துவ சிகிச்சையும் வழங்கப்பட உள்ளது. அதன்படி அந்தோதயா அட்டைதாரர்கள் இலவச சிகிச்சை அளிக்க ஆயுஷ்மான் அட்டைகள் தயாரிக்க உள்ளதாக மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு சார்பில் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் மக்கள் இந்த வசதியை பெறுவதற்கு பல மையங்கள் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் ரேஷன் கார்டை காட்டி பொது வசதி மையத்தில் ஆயுஷ்மான் கார்டிற்கு மக்கள் விண்ணப்பிக்கலாம். இதன் மூலமாக அவசர சமயங்களில் பயணங்கள் மருத்துவச் செலவுக்கு நிதி வழங்க அரசு அமல்படுத்திய ஒரு காப்பீடு திட்டமாக உள்ளது.