இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமக்களுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இதன் தேவை அதிகரிக்க அதிகரிக்க மறுபக்கம் மோசடி சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. ஆதார் மூலம் நடைபெறும் மோசடியை தடுப்பதற்காக ஆதார் அமைப்பு முகமூடி ஆதார் சேவையை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலமாக உங்களுடைய ஆதார் விவரங்கள் திருடப்படும் அபாயத்தை குறைக்க முடியும்.

முகமூடி ஆதார் என்பது தனி உரிமை மேம்படுத்தும் ஆதார் தகவலின் அபாயத்தை குறைக்கவும் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் அறிமுகம் செய்யப்பட்ட அம்சமாகும். இதில் ஆதார் எண்ணின் முதல் 8 இலக்கங்கள் மறைக்கப்படும். அது மட்டுமல்லாமல் கடைசி நான்கு இலக்கங்கள் மட்டுமே தெரியும். அதனைப் போலவே உங்களுடைய பெயர், புகைப்படம் மற்றும் கியூ ஆர் கோட் போன்ற முக்கிய விவரங்கள் இதில் தெரியும். ஆதார் பயனர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து இதனை எளிதில் பதிவிறக்கம் செய்யலாம்.

  1. அதற்கு முதலில் myaadhaar.uidai.gov.in என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
  2. அதில் ஆதார் எண் அல்லது பதிவு ஐடியை உள்ளிட்டு, கேப்ட்சாவை நிரப்பி, ‘ஓடிபி அனுப்பு’ என்பதைக் கிளிக் செய்து  சேவைகள் பிரிவில் இருந்து பதிவிறக்க ஆதார் என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
  3. அதில் முகமூடி அணிந்த பாத்திரம் வேண்டுமா? என்ற விருப்பத்தைத் தேர்வு செய்து  பதிவிறக்கம் என்பதைக் கிளிக் செய்ய, முகமூடி ஆதார் PDFஆக பதிவிறக்கம் செய்யப்படும்.
  4. ஆதார் அட்டையைத் திறக்க உங்களுக்கு கடவுச்சொல் தேவை இதற்கு நீங்கள் கடவுச்சொல்லை உள்ளிட வேண்டும். கடவுச்சொல் – உங்கள் பெயரின் முதல் நான்கு எழுத்துக்கள் பெரிய எழுத்துக்களில் மற்றும் உங்கள் பிறந்த ஆண்டு YYYY என்று பதிவிட வேண்டும்.