அரசு ஓய்வூதியதாரர்கள் பென்ஷன் பெறுவதற்கு வருடம் தோறும் தங்களுடைய வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிக்காதவர்களுக்கு பென்ஷன் தொகை வழங்கப்பட மாட்டாது. இந்நிலையில் மதுரையில் 40 ஆயிரம் பேர் பென்ஷன் பெற்று வரும் நிலையில், ஜூலையில் நடைபெற்ற நேர்காணலின் போது பலர் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்காதது தெரியவந்துள்ளது. இந்த நேர்காணலில் 99 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட நிலையில், 150-க்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள் கலந்து கொள்ளவில்லை.

இவர்களில் சிலர் தங்களுடைய பென்ஷன் தொகையை வங்கிகளில் இருந்து எடுக்காமலும் இருக்கிறார்கள். இதன் காரணமாக அந்த தொகையை மீண்டும் அரசிடமே சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதோடு, அவர்களின் ஓய்வூதிய கணக்குகளும் முடக்கப்பட்டு வருகிறது. மேலும் ஓய்வூதியதாரர்கள் பற்றி நான்கு அறிந்து கொண்ட பிறகு அவர்களுடைய கணக்குகள் மீண்டும் திருப்பி கொடுக்கப்படும் என மாவட்ட கருவூல அலுவலர் அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.