நடந்து முடிந்த கர்நாடக சட்டசபை தேர்தலில் 135 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்தது காங்கிரஸ் கட்சி. இதையடுத்து சித்தராமையா முதல்வராகவும், டி. .கே.சிவக்குமார் துணை முதல்வராகவும் பதவியேற்றுக்கொண்டனர். பதவியேற்றதும்  காங்கிரஸ் சார்பில் அறிவிக்கப்பட்ட 5 முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.  அதன்படி, மாநிலம் முழுவதும் அரசுப்பேருந்தில் பெண்களுக்கு இலவச பயணம்.

குடும்பத்தலைவிகளுக்கு மாதந்தோறும் ₹2000 நிதியுதவி.  மாதந்தோறும் குடும்பத்தில் ஒவ்வொருவருக்கும் தலா 10 கிலோ இலவச அரிசி. அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம்.  வேலையில்லா பட்டதாரிகளுக்கு ₹3000, டிப்ளமோ படித்தவர்களுக்கு ₹1500 நிதியுதவி, 2 ஆண்டுகளுக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், புதிய முதல்வருக்காக ரூ.1 கோடி மதிப்பில் புதிய சொகுசு கார் (டொயோட்டா வெல்ஃபயர்) ஒன்று கர்நாடகா அரசு சார்பில் வாங்கப்பட்டுள்ளது.