ஒரு நாட்டைக் கடந்து மற்றொரு நாட்டிற்கு செல்கிற எவரும் பாஸ்போர்ட் பெற வேண்டியது அவசியமாக உள்ளது. அதனால் பாஸ்போர்ட் நமக்கு தேவை என்றால் முதலில் நாம் அணுகுவது இடை தரகர்களை தான், ஆனால் தற்போது எந்த இடை தரகர்களும் இல்லாமலே நாமே நேரடியாக பாஸ்போர்ட் எடுக்க இந்திய அரசாங்கம் வழிவகை செய்துள்ளது. இந்நிலையில் இந்தியாவில் அதிகமானோர் பாஸ்போர்ட் வைத்திருக்கும் மாநிலங்களில் கேரளா முதலிடத்தை பிடித்துள்ளது.

பாஸ்போர்ட் தொடர்பான புள்ளி விவரங்களை, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டது. இதில், 4 கோடி மக்கள் இருக்கும் கேரளாவில் சுமார் 1 கோடி பேர் பாஸ்போர்ட் வைத்துள்ளது தெரியவந்துள்ளது. வளைகுடா நாடுகள், அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, இஸ்ரேல் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் மலையாளிகள் அதிகமாக வசிக்கின்றனர்.