சென்னையில் புதிதாக கட்டப்பட்டு வரும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பிப்ரவரி 15-ஆம் தேதி திறக்கப்பட இருக்கிறது. இந்த பேருந்து நிலையத்திலிருந்து தென் மாவட்டங்களுக்கு அதிக அளவில் பேருந்துகள் இயக்கப்படும் என்பதால் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பெரும் அளவு கூட்ட நெரிசல் குறையும். அதன்பிறகு நீல வழித்தடத்தில் விமான நிலையத்திலிருந்து கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் சேவையை விரிவாக்கம் செய்வதற்கு திட்டமிட்ட நிலையில் தற்போது அதற்கு ஒப்புதல் கிடைத்துள்ளது.

சென்னை விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் வரை நீல வழிதடத்தில் மெட்ரோ ரயில் சேவையை 15.8 கிலோமீட்டர் நீளத்தில்‌ 12 உயர்மட்ட ரயில் நிலையங்களுடன் மெட்ரோ ரயில் சேவையை விரிவு படுத்துவதற்கு தலைமைச் செயலாளர் தலைமையிலான உயர்மட்ட குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும் இன்னும் 3 வருடங்களுக்குள் நீல வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவையானது விரிவுபடுத்தப்படும். இந்த அறிவுப்பு  சென்னை மக்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.