ஆஸ்திரேலிய மூத்த கிரிக்கெட் வீரர் கிளென் மெக்ராத் மலைப்பாம்பை சாமர்த்தியமாக பிடிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
உலகின் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான ஆஸ்திரேலிய மூத்த கிரிக்கெட் வீரர் கிளென் மெக்ராத் (53) ஒரு சிறிய சாகசம் செய்தார். அவரது வீட்டிற்குள் பதுங்கியிருந்த மலைப்பாம்புகளை சாதுர்யமாக பிடித்து, எடுத்துச் சென்று வெளியில் விட்டார். இந்த வீடியோவை மெக்ராத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மலைப்பாம்பு விஷப் பாம்பாக இல்லாவிட்டாலும் அதன் கடியால் பக்கவிளைவுகள் ஏற்படும். மேலும், கடித்தாலும் உடனே விடாது. அப்படியிருக்கையில் அதனை சாதூர்யமாக பிடித்துள்ளார்.மெக்ராத் தனது வீட்டில் கார்பெட் மலைப்பாம்பு ஒன்றைக் கண்டுபிடித்து அதை ஒரு துடைப்பான் மூலம் பிடித்தார். வீடியோவில், துடைப்பம் குச்சியால் தலை மற்றும் வாலைப் பிடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே அழைத்துச் செல்வதை காணலாம். அது பாதுகாப்பாகக் கொண்டு செல்லப்பட்டு மரங்களில் விடப்பட்டதாக மெக்ராத் தெரிவித்தார். மேலும் ஆச்சரியம் என்னவென்றால், தனது மனைவி சாரா லியோன் மெக்ராத்தின் உதவியுடன், வீட்டிற்குள் நுழைந்த மூன்று கார்பெட் வண்டுகளைப் பிடித்து வெளியே அனுப்பியதாக மெக்ராத் கூறினார்.