பொதுவாகவே ஒவ்வொரு நாளும் ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுடைய எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தற்போது எந்த வயதிலிருந்து குழந்தைகளுக்கு டிக்கெட் எடுக்க வேண்டும் என்பது குறித்து ரயில்வேயில் புதிய ரூல்ஸ் உள்ளது. அதாவது ஒரு வயது முதல் நான்கு வயது வரை குழந்தைகளுக்கு ரயில் டிக்கெட் எடுக்க வேண்டிய அவசியம் கிடையாது. அதன் பிறகு ஐந்து முதல் 12 வயது வரை உடைய குழந்தைகளுக்கு கட்டாயமாக சீட் வேண்டாம் என்றால் அரை டிக்கெட் மட்டும் எடுத்துக் கொள்ளலாம்.

ஆனால் அரை டிக்கெட் எடுக்கும் பட்சத்தில் உங்களுடைய இருக்கையில் தான் குழந்தைகளை அமர வைத்துக் கொள்ள வேண்டும் . குழந்தைகளுக்கு என்று தனியாக சீட்டு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றால் ஐந்து முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு கட்டாயமாக அவர்களுடைய பெற்றோர்கள் முழு டிக்கெட் எடுக்க வேண்டும்.