தமிழ்நாடு சட்டப்பேரவையில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை மீதான மானிய கோரிக்கையின் விவாதமானது நேற்று நடைபெற்றது. இதில் உறுப்பினர்களுடைய கேள்விகளுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பதில் அளித்தார். அப்போது பேசிய அவர், முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவின் பேரில். கடந்த இரண்டு வருடங்களில் 95 ஆயிரம் பழுதடைந்த மின்மாற்றிகளை மாற்றம் செய்து மின்சாரத் துறை சாதனை படைத்துள்ளது.

மின்னஞ்சல் மூலமாக 15 லட்சம் புகார்கள் பெறப்பட்டுள்ளது. இதில் 99.5 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத புதிய வடிவமைப்போடு ஸ்மார்ட் மீட்டர் பொறுத்த வேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். அதற்கு டெண்டர் விடப்பட்டு பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள மூன்று கோடி வீடுகளில் இந்த ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.