கர்நாடக மாநிலத்தில் மே 10-ம் தேதி சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. தேர்தல் முடிவடைந்த பிறகு மே 13-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப் படுகிறது. தற்போது கர்நாடகாவில் முதல்வர் பசுவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெறுகிறது. இதனால் மீண்டும் பாஜக ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் தீவிரம் காட்டி வருகிறது.

பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜகவின் தேசிய தலைவர்கள் பலர் கர்நாடகாவுக்கு சென்று தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளனர். முன்னாள் முதல்வர் சித்தராமையா கர்நாடகாவின் வருணா தொகுதியில் போட்டியிடுகிறார். தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் இவர் இந்த தொகுதியில் வெற்றிபெறுவார் என்றே கூறுகின்றனர். இந்நிலையில், அப்பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர் சித்தராமையாவை தோற்கடித்ததால் எனது நிலத்தை விற்று 50 லட்சம் தருவேன் என அறிவித்துள்ளார்.