தமிழகத்தில் குடும்பத்தலைவிகளுக்கான ஆயிரம் உதவி தொகை திட்டம் அல்லது செப்டம்பர் 15ஆம் தேதியில் அமலுக்கு வர உள்ளது. இந்த நிலையில் இந்த திட்டம் இரண்டு கட்டங்களாக விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில் 1.63 லட்சத்திற்கும் அதிகமான குடும்ப தலைவிகள் விண்ணப்பித்திருக்கிறார்கள். இந்த திட்டம் தொடங்குவதற்கு இன்னும் 17 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் விண்ணப்பத்தை சரிபார்க்கும் பணியானது  விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இதற்கான பணிகளை அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் ஒரே ஆண்டில் 3600 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு மகளிர் உரிமை தொகை ஆயிரம் ரூபாய் கிடையாது என்ற புதிய தகவல் வெளியாகி உள்ளது. மின்வாரிய அலுவலகம் மூலமாக நுகர்வோரின் பட்டியல் தற்போது எடுக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை 2020 ஆம் ஆண்டிலிருந்து 2023 ஆம் ஆண்டு வரை எடுக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.