தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. குடும்பத் தலைவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய், உயர்கல்வி படிக்கும் பெண் பிள்ளைகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய், பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் உள்ளிட்ட வாக்குறுதிகள் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றது இதில் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. விரைவில் குடும்ப தளைவிகளுக்கு ரூ.1000 திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது. மகளிர் இலவச பேருந்து பயணம் என்ற திட்டம் நிறைவேற்றப்பட்டு பெண்களுடைய நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

பள்ளி மாணவிகள் முதல் வயதான மூதாட்டிகள் வரை அனைவருமே இந்த திட்டத்தால் பயனடைந்து வருகின்றனர். இந்த திட்டத்தின் மூலமாக சுமார் ஆயிரம் ரூபாய் வரை சேமிக்க முடிந்ததாகவும் பெண்கள் தெரிவிக்கின்றனர். அரசு விரைவு பேருந்துகளில் பெண்களுக்கு 4 முன்பதிவு இருக்கைகள் ஒதுக்கீடு செய்யும்  நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்தது. அரசு விரைவு பேருந்துகளில் ஏற்கனவே பெண்களுக்கு 2 முன்பதிவு இருக்கைகள் ஒதுக்கப்பட்ட நிலையில் தற்போது 4ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. 4 இருக்கைகள் ஒதுக்கப்படும் என போக்குவரத்து மானியக் கோரிக்கையின்போது அமைச்சர் சிவசங்கர் அறிவித்திருந்த நிலையில், அது நடைமுறைக்கு வந்துள்ளது.