
தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகர் யோகி பாபு. இவர் படங்களில் காமெடி கதாபாத்திரங்களிலும், கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். கோலமாவு கோகிலா என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். இந்நிலையில் இவரது நடிப்பில் வெளியாகியுள்ள “ஜோரா கையத் தட்டுங்க” திரைப்படம் வருகிற 16-ஆம் தேதி வெளியாக உள்ளது.
இந்த திரைப்படத்தினை விநிஷ் மில்லினியம் இயக்கியுள்ள நிலையில் ஜாகிர் அலி தயாரித்துள்ளார். இந்த திரைப்படத்தில் ஹரிஷ் பேரடி, சாந்தி தேவி, ஜாஹிர் அலி, மணிமாறன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் மாயாஜால வித்தையை காட்டும் கலைஞரின் வாழ்க்கை வரலாறை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டதாகும்.
இதைத்தொடர்ந்து இந்த திரைப்படம் வருகிற 16-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ள நிலையில் படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.