
திருநெல்வேலி மாவட்டம் அம்பை பகுதியில் ரத்தினம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் டீக்கடை வைத்து நடத்தி வரும் நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததுடன், யாரிடமும் சொல்ல கூடாது என்று மிரட்டியுள்ளார். இதனை அறிந்த மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்படி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் ரத்தினத்தை கைது செய்தனர்.
இவர் மீதான வழக்கு தற்போது நெல்லை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி குற்றவாளி ரத்தினத்திற்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5000 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். இது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் இந்த ஆண்டில் மட்டுமே 11 போக்சோ வழக்குகளில், 11 குற்றவாளிகள் சிறை தண்டனை பெற்றுள்ளனர்.
அதில் முக்கிய சரித்திர பதிவேடு குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மேலும் நெல்லை மாவட்ட காவல்துறையானது பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக பல சட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதோடு பெண்கள் மற்றும் குழந்தைகளிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் செய்யும் குற்றவாளிகளுக்கு தக்க தண்டனையும் பெற்றுக் கொடுத்து வருகிறது என்று கூறினார்.