
தலைநகர் டெல்லியில் சிவில் லைசன்ஸ் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் (25) சைபர் கிரைம் காவல்துறையினரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்தப் புகாரில் தனது பெயரில் மர்ம நபர்கள் ஒரு சிலர் பேக் ஐடி தொடங்கி எனது உறவினர்கள், நண்பர்கள் இடம் பண மோசடி செய்துள்ளதாக புகார் அளித்திருந்தார்.
அந்தப் புகாரின் பேரில் விசாரணை நடத்திய காவல்துறையினர் சம்பந்தப்பட்ட பேக் ஐடி எந்த எண்ணில் இருந்து இயக்கப்படுகிறது என்பதை கண்டறிந்தனர். அதன்படி டெல்லியில் உள்ள கிருஷ்ணா நகர் பகுதியை சேர்ந்த அமான் என்ற நபர் என்பவர் என தெரிய வந்தது. இதனை அடுத்து அமானை கைது செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில், புகார் கொடுத்த பெண்ணின் முன்னாள் காதலர் என தெரியவந்தது.
தனது முன்னாள் காதலியை பழிவாங்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவரது பெயரை பயன்படுத்தி பேக் ஐடி ஒன்றை தொடங்கி அவரது உறவினர்களிடம் அவசரமாக பணம் தேவைப்படுவதாக கூறி நம்ப வைத்து ஏமாற்றியுள்ளார். அந்தப் பெண்ணின் உறவினர்களின் சிலர் பணத்தை அனுப்பி வைத்துள்ளனர்.
ஆனால் சில தோழிகள் சந்தேகத்தால் அந்த பெண்ணை தொடர்பு கொண்டு விசாரித்த போது தான் பேக் ஐடி என்பது தெரிய வந்தது. தற்போது அமான் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு உள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.