கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ரேஸ்கோர்ஸ் சப்- இன்ஸ்பெக்டர் அருள் முகநூலில் யாராவது அவதூறு பதிவு செய்கிறார்களா என்று ஆய்வு செய்து வந்துள்ளார். இந்நிலையில் எம்.எச்.எம் அப்துல்லா என்பவர் தேசிய கொடியில் அசோக சக்கரத்தை எடுத்து விட்டு பிறை நட்சத்திரம் வைத்து 2047 என்று முகநூலில் பதிவு செய்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்து சப்- இன்ஸ்பெக்டர் அருள்பெருமாள் ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் அப்துல்லா மீது ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.