குஜராத் மாநிலம் கட்ஜ் பகுதியில் ராமின் கேசரியா என்ற இளம்பெண் வசித்து வருகின்றார். இவருக்கு ஒரு வாலிபருடன் திருமணமான நிலையில் அவரைப் பிரிந்து வாழ்ந்து வருகின்றார். இந்நிலையில் ராமி கேசரியா அதே பகுதியை சேர்ந்த அனில் என்ற வாலிபரை காதலித்து வந்துள்ளார். இவர்களது காதல் குடும்பத்தினருக்கு தெரியவந்து அவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால் காதலனை கரம் பிடிப்பதில் ராமின் கேசரியா உறுதியாக இருந்தார்.

ஆகவே இருவரும் ஓடி சென்று திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளனர். ஆனால் குடும்பத்தினர் எப்படியும் கண்டுபிடித்து விடுவார்கள் என எண்ணிய ராமி கேசரியா தான் இறந்தது போல நடிக்க திட்டமிட்டுள்ளார். ஆகவே கடந்த ஜூலை மாதம் ராமின் கேசரியா தனது காதலன் அனிலுடன் சேர்ந்து அப்பகுதியில் யாசகம் எடுத்துக் கொண்டிருந்த அப்பாவி முதியவர் ஒருவரை கழுத்தை நெரித்து கொலை செய்து பின்னர் முதியவரை தீவைத்து எரித்துள்ளார்.

மேலும் அவரது உடல் எரிக்கப்பட்ட மரக்கட்டைகளுக்கு அருகே ராமி கேசரியா தனது செல்போன், காலணி ஆகியவற்றை விட்டு சென்றுள்ளார். மறுநாள் எரிந்த நிலையில் உடல் கிடப்பதையும் அங்கு ராமி கேசரியாவின் செல்போன் மற்றும் காலணி இருப்பதை பார்த்து அவரது குடும்பத்தினர் அவர் தான் தற்கொலை செய்து கொண்டதாக கருதியுள்ளனர். பின்னர் ராமி கேசரியா தனது காதலனுடன் வெளியூர் சென்று வாடகை வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்துள்ளார்.

ஆனாலும் ராமி கேசரியா, அப்பாவி முதியவரை கொன்ற குற்ற உணர்ச்சியில் மூழ்கி நடந்தவற்றை தனது தந்தையிடம் கூறி மன்னிப்பு கேட்டுள்ளார். இதனைக் கேட்ட தந்தை மகளின் மன்னிப்பை ஏற்க மறுத்ததோடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரியின் பேரில் ராமி கேசரியா மற்றும் அவரது காதலன் அனில் ஆகிய 2 பேரையும் காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் ராமி கேசரியா தனது காதலனுடன் சேர்ந்து யாசகம் எடுத்துக் கொண்டிருந்த முதியவரை வேனில் கடத்தி சென்று கழுத்தை நெரித்து கொன்றது தெரிய வந்தது மேலும் தான் தற்கொலை செய்து கொள்வது வீடியோ எடுத்து அதனை அவரது தந்தைக்கும் அனுப்பி வைத்துள்ளனர்.

இதனால் இறந்து கிடந்தது தனது மகள் தான் என அவரது பெற்றோர் கருதி வந்ததும் போலீஸ் விசாரணையில் அம்பலமானது. இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட ராமி கேசரியும் அவரது காதலன் அனில் ஆகியோரை கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். மேலும் கொலை செய்யப்பட்ட அப்பாவி முதியவர் யார் என்பதை கண்டுபிடிக்கும் முயற்சிகளிலும் காவல்துறையினர் இறங்கியுள்ளனர்.