
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வாக்குசாவடி முகவர்கள் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், டிசம்பர் மாதம் முடிஞ்சு ஜனவரி மாசம் வாக்காளர் பட்டியலை சிஸ்டத்துல வெளியிடுவாங்க எலக்சன் கமிஷன்….. உன் பகுதிக்கு எந்த வார்டு, அத கண்டுபிடிச்சு…. அந்த பட்டியலை எடுத்து, அந்த பட்டியலை நீ பார்க்கணும். என்ன பாக்கணும் என்றால் ? நம்ம ஊர்ல இருக்கிறவர்கள் எல்லோரு பெயரும் இதுல இருக்கா ?
யாரு பெயராவது விடுபட்டு இருக்கா ? யார் பெயராவது விடுபட்டிருந்தால், அவங்க பெயரை இணைக்க வேண்டும். இதுதான் நீங்கள் செய்ய வேண்டிய வேலை. என்ன வேலை ? வாக்காளர் பட்டியலில் இல்லாதவங்க பெயரை குறிப்பிட்ட தினத்துக்குள் போய்…. உரிய அதிகாரி இடத்திலேயே மனுவை வாங்கி, அதற்கென்று இருக்கின்ற ஃபார்ம் என்னவோ அதை வாங்கி பில்லப் பண்ணி கொடுக்கணும்…
ஒரு ஆள் பத்து பேரை சேர்க்க முடியும்…. அது பூத் லெவல் ஏஜெண்டுக்கு மட்டும்தான் அந்த அதிகாரம்….. உனக்கு மட்டும் தான் அந்த அதிகாரம்…. கண்டவன் எல்லாம் சேர்க்க முடியாது…. தனியா என் பேரு இல்லைன்னு போய் சேர்த்துக்கலாம்…. பொதுவாக இருக்கின்ற நான் போய் இவங்களெல்லாம் சேருங்கன்னு எழுதிக் கொடுக்க முடியாது… நான் ஒரு பார்ட்டியோட பூத் லெவல் ஏஜென்ட். என்னை விடுதலை சிறுத்தைகள் கட்சியில் பூத் ஏஜெண்டா போட்டு இருக்காங்க….. இந்தா பாருங்க ஐடி என சொல்லி, நீ ஒரு பார்ம் வாங்கி 10 பேரை சேர்த்து ….பேர்ல சேர்த்து விடலாம், அடிஷன்…
இவுங்க எல்லாம் செத்து போயிட்டாங்க.. இவங்க பெயரை நீக்குங்க….. டெலிஷன். அதை நீங்க செய்யலாம். இந்த பெயர் தப்பா இருக்கு…. இனிஷியல் தப்பு …முகவரி தப்பு….. அப்பா பெயர் தப்பு…. திருமாவளவன் என்கிற இடத்தில் திருமால்வளவன் என்று இருக்கிறது. ”ல்” இருக்கக் கூடாது அடி. பழைய பெயர் இரா. திருமாவளவன் இப்ப என் பெயர் தொல் திருமாவளவன். வாக்காளர் பட்டியல்ல இரா.திருமாவளவன் தான் இருக்குது. அத அழிச்சிட்டு தொல் திருமாவளவன் என்று போடணும். இது மாடிஃபிகேஷன். இந்த வேலையை செய்யக்கூடிய அதிகாரம் உங்களுக்கு இருக்கிறது.
நீங்க செய்யணும். என்ன வேலை செய்யணும் ? வாக்காளர் பட்டியலை சரிபார்க்க வேண்டும்… இல்லாத பெயரை இணைக்க வேண்டும்…. இறந்து போனவர்கள் பெயரை நீக்க வேண்டும்…. ஊரை விட்டு வெளியேறி போனவர் பெயரை நீக்க வேண்டும்.அவனெல்லாம் மெட்ராஸ்ல போய் செட்டில் ஆயிட்டாங்க…. பாம்பேல போய் செட்டில் ஆயிட்டாங்க….
பெங்களூர்ல போய் செட்டில் ஆயிட்டாங்க….. இங்க வர மாட்டாங்க…. அங்க தான் ஓட்டு இருக்குது…. அவன் பெயர் இங்க இருக்க கூடாது. இருந்தா என்ன ? அவன் வரமாட்டான்… வரவில்லை என்றால் என்ன ? அந்த ஓட்டை எவனாவது திருட்டு ஓட்டு போட்டு விடுவான். திருட்டு ஓட்டு போடாமல் தடுக்கணும்னா…. அவன் பெயரை நீ நீக்க வேண்டும்…
கடைசி நேரத்துல பேசி நீ 10 ஓட்டு போட்டுக்கோ… நான் 10 ஓட்டு போட்டுகிறேன் என்ற வேலையெல்லாம் இருக்க கூடாது. நமக்கு 10 ஓட்டு, அவனுக்கு 10 ஓட்டு வரணும் என்ற காம்ப்ரமைஸ் முட்டாள்தனமானது, செய்யவே கூடாது. அது போலிங் ஏஜென்ட் செய்ற வேலை. பூத் ஏஜென்ட் முன்கூட்டியே இதெல்லாம் டெலிட் பண்ணிடனும் என தெரிவித்தார்.