
செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திராவிட முன்னேற்றக் கழகம், அது சார்ந்த ஆர்எஸ்எஸ், பிஜேபி, திராவிட கழகங்கள். இவங்க எல்லாம் சேர்ந்து என்னை எழுதி… எழுதி.. எழுதி… எழுதி… பேசி… பேசி… மக்கள்ட்ட கொண்டு சேர்த்து, என்னை முதலமைச்சராகிட்டு தான் விடுவாங்க. நீங்க வேணா பாருங்க. நடக்கும் பாருங்க.
உங்களை விட என் மேல அவதூறு பேசுறவன், விமர்சிக்கிறவன், என்னை திட்டுகிறவனை நான் பெரிதும் மதிக்கிறேன், நேசிக்கிறேன். ஏன்னா… நான் பேசுறது கேட்டுட்டு, நீ படுத்துற. அவன் 24 மணி நேரமும் என்னை திட்டிட்டே இருக்கான். அவன் தான் என்ன உன்னை விட அதிகமா நேசிச்சு, நினைச்சுட்டு இருக்கான். அதனாலதான் நான் அவங்கள அதிகமா நேசிக்கிறேன், பேசு.
நீங்க பாருங்க என் செய்தி இப்போ ஓடும். கொஞ்ச நேரம் கழிச்சு… அந்த விஜயலட்சுமி இவர்கள் இப்படி சொல்லிவிட்டார்கள் ? இந்த விஜயலட்சுமியை இப்படி சொல்கிறார்கள் என அது ஒரு செய்தி ஓடும். இந்த விஜயலட்சுமி அப்படி சொல்கிறார்கள், டேய் என்னடா உங்க பிரச்சனை.
உங்களுக்கு என்னதான் பிரச்சனை. இது மாதிரி ஒரு பத்து பேர் மேல அவங்க புகார் அளித்தது இருக்கு. என்கிட்ட ஆவணங்கள் எல்லாம் இருக்கு … போட்டு காட்டனும்னா… கூட உங்களுக்கு போட்டு காட்டுறேன். அதுக்கு ஒரு நேரம் வரட்டும்னு இருக்கேன் என தெரிவித்தார்.