
செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இலங்கை கடற்படையால் கொலை செய்யப்பட்ட ஒரு மீனவர். அவருடைய உடல் திரும்பி வந்துச்சு. அவுங்க தாய் – தந்தையர் நான் உடலை வாங்கவே மாட்டேன், எனக்கு சடலம் வேண்டாம் என சொல்லி பிரேத பரிசோதனை பண்ணக்கூடிய இடத்தில வைத்திருந்தாங்க.
என் பையனே இருந்தாலும் இது அநியாயம் அப்படின்னு சொன்னாங்க… மோதி அய்யா என்னை கூட்டி நீ போமா ராமேஸ்வரத்துக்கு என சொன்னாங்க, நான் வந்தேன். அந்த பையன் பெயர் பிரிட்டோ என்று நினைக்கிறேன்… தப்பா இருக்கலாம்… மீனவரோடு வந்து உட்கார்ந்தேன். அந்த அம்மாவோட உக்காந்தேன், கெஞ்சி கேட்டேன்…
அம்மா நீங்க கவலைப்படாதீங்க…. தயவு பண்ணி உடலை அடக்கம் பண்ணிடுங்க, அப்படின்னு அப்போ சொன்னேன். அப்படியாக ஒவ்வொரு முறையும் செஞ்சோம். ஒன்னும் பண்ணலன்னு சொல்றவங்க ஏன் லெட்டர் எழுதிட்டே இருக்காங்க… ஐயா இன்னைக்கு மீனவர்கள் பிடிக்கப்பட்டாங்க… அவங்க படகெல்லாம் பிடிக்கப்பட்டதுக்கு…
அதுக்கு பதில் கொடுத்தவங்க யாரு? மோதிதான்… ஒவ்வொரு தடவையும் அவர் தான் பேசி, ஜெய்சங்கரை அனுப்பி, அதற்கு முன்னாடி சுஷ்மாசுவரஜ் அம்மா இருந்தபோது அவங்களே டைரக்டா போய் பேசி மீட்டெடுத்து வந்து இருக்காங்க. 2014இல் இருந்து இன்னைக்கு வரைக்கும் நான் சொல்ல முடியும். எத்தனை மீனவர்களை கூட்டிட்டு வந்திருக்கோம்னு ? அது எங்க கடமை, அதை நாங்க பண்ணுவோம் என தெரிவித்தார்.