
தேர்தல் வியூக வகுப்பாளராக இருப்பவர் தான் பிரசாந்த் கிஷோர். இவர் பாஜக, காங்கிரஸ், திமுக, திரிணமூல் போன்ற பல கட்சிகளுக்கு தேர்தல் ஆலோசகராக இருந்துள்ளார். இதையடுத்து பீகார் வளர்ச்சிக்காக கடந்த 2022 ஆம் ஆண்டு ஜன் சுராஜ் என்ற கட்சியை தொடங்கினார். இந்நிலையில் நேற்று முன்தினம் பீகார் மாநிலம் சரண் பகுதியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அவர் கூறியதாவது, நான் முதலமைச்சராக வேண்டும் என்று சிலர் விரும்புகிறார்கள்.
ஆனால் உங்களுக்கு என்னை பற்றி தெரியவில்லை என் உழைப்பால் 10 முதல்வர்களை உருவாக்கியுள்ளேன். இன்று நான் கடுமையாக உழைப்பது நான் முதல்வராக வேண்டும் என்பதற்காக அல்ல. என்னுடைய கனவு நிறைவேற வேண்டும் என்றுதான். அறியானா, பஞ்சாப்பிலிருந்து வேலைக்காக மக்கள் பீகாருக்கு எப்போது வருகிறார்களோ அப்போதுதான் என்னுடைய கனவு நினைவாகும். அப்போதுதான் பீகார் வளர்ச்சி அடைந்ததாக நான் கருதுகிறேன் என்று தெரிவித்தார்.