செய்தியளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி, என்னை பொறுத்தவரை என்னவென்றால்,  வளர்ச்சி திட்டங்கள் தேவை.  வளர்ச்சி திட்டங்களில் இல்லாமல் ஒரு நாடு முன்னேற முடியாது. ஒரு சின்ன உதாரணம் சொல்கிறேன்.. உள்நாட்டு உற்பத்தி என்பது சீனாவில் இந்தியாவை விட 30 மடங்கு அதிகமாக இருக்கிறது. வெளிநாடுகளில் 100 பொருள் வெளிநாட்டு சந்தையில் இருக்குன்னா….  அதுல 30 பொருள் சீனாவில் இருந்து தயாரிக்கப்பட்டது.

மூன்று பொருள் இந்தியாவில் இருந்தது தயாரிக்கப்பட்டது. நீங்க சீனாவின் உடைய வளர்ச்சிக்கு என்ன காரணம் ? தொழில் வளர்ச்சிக்கு… போக்குவரத்திற்கு…. மற்றும் முன்னேற்றங்களுக்கு அவர்கள் எந்த தடையும் சொல்லாமல் அவைகளை எல்லாம் செய்கிறார்கள்.

நீங்க துறைமுகம் அறிவிப்பதாக இருந்தாலும், ரயில்வே சாலை என்றாலோ…. சாலை போக்குவரத்து என்றாலோ… தொழிற்சாலை என்றாலோ… விமான நிலையம் என்றாலோ… இடம் வேண்டும். இடமில்லாமல் இதெல்லாம் செய்ய முடியாது. உலகம் முழுவதும் இவைகள் எல்லாம் அமைக்கப்பட்டிருக்கிறது. ஏதாவது ஒரு இடத்தில் தான் அமைக்கப்பட்டிருக்கிறது.

எந்த இடம் தேர்வு செய்வது என்பதை அரசம்,  பொதுமக்களும் கூடி  முடிவு செய்யலாம். ஆனால் இடத்தையே எடுக்க கூடாது என்று சொன்னால்,  இவை எல்லாம்  வானத்திலே அமைக்க முடியும். அமைக்க முடியாது… இதனால ஒருத்தருடைய வாழ்வாதாரம் கெட்டுப் போகக்கூடாது. அதையும் ஒரு அரசாங்கம் கவனத்தில் வைத்து,

அவர்களுடைய வாழ்வாதாரத்திற்கும்,  சமமான வாய்ப்புகளை கொடுத்து….  அதே நேரத்துல தொழில் வளர்ச்சியையும் கொண்டு வர வேண்டும். இல்லை என்று சொன்னால்,  ஒரு நாடு முன்னேறவே முன்னேறாது. அதனாலதான் நிலத்தை கையகப்படுத்தினால்,  நாம என்ன சொல்றோம்னா…..  அந்த நிலம் வைத்திருப்பவருடைய…… நிலத்திற்கு ஈடான பதிப்பை.. பல மடங்கு அதிகமாக  கூட்டி அவர்களுக்கு வழங்க வேண்டும்.

இன்றைக்கு இந்த இடத்தில் ஒருத்தர் அஞ்சு ஏக்கர் நிலம் வைத்திருக்கிறார் என்றால்,  அவர் அரசாங்கத்தினுடைய திட்டத்திற்காக கொடுத்தால்….. அவர் அதனுடைய நிதியை வாங்கிட்டு போய்,  அதே மாதிரி வளமான ஒரு இடத்தை இன்னொரு இடத்தில் வாங்கணும். ஆனால் நீங்க கொடுக்கிற பணத்தை எடுத்துட்டு அவர்கள் அது மாதிரி வாங்க முடியாது என்றால்  அந்த வாழ்க்கை அழிஞ்சிடும். அந்த குடும்பம் சிதஞ்சிடும்.

ஆனால் நல்ல நஷ்ட ஈடு கொடுத்து,  இடங்களை கையகப்படுத்த வேண்டுமே ஒழிய,  இடமே கூடாது என்று சொல்வது தவறான வாதம். எல்லாரும் அதற்கு தலையாட்ட கூடாது. சிலவற்றை செய்துதான் ஆக வேண்டும். ஆனால் அந்த மக்களுக்கு வாழ்வாதாரம் பாதிக்காமல் செய்ய வேண்டும்.உங்களுடைய கேள்விக்கு நான் பதில் சொல்றேன், அதை போடுங்க. இது DMKவின் இரட்டை நிலைப்படா ? என அவர்களிடம் கேளுங்கள், DMKவிடம் கேளுங்கள் என தெரிவித்தார்.