
தலைநகர் டெல்லியில் ரங்கோலா என்ற பகுதியில் உள்ள குடியிருப்பில் தம்பதி மற்றும் அவர்களின் இரண்டு மகள்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை வீட்டில் 13 வயது சிறுமி தனியாக இருந்துள்ளதை அறிந்து அங்கு வந்த பக்கத்து வீட்டுக்காரர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
மேலும் நடந்ததை பெற்றோரிடம் கூறினால் கொலை செய்து விடுவேன் என்றும் மிரட்டியுள்ளார். தனக்கு நடந்த கொடுமையை பற்றி சிறுமி தனது தாயிடம் கூறினார். அதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த தாயார் இது குறித்து போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.