
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய தலைமை பொறுப்பில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சபி கான் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். ஆப்பிள் நிறுவனம் உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாகும். மொபைல் போன், லேப்டாப், ஸ்மார்ட் வாட்ச் போன்ற சாதனங்களை தயாரித்து வருகிறது. அமெரிக்காவை சேர்ந்த இந்த நிறுவனம் உலக அளவில் உற்பத்தியை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் ஆப்பிள் நிறுவனத்தின் புதிய தலைமை செயல்பாட்டு அதிகாரியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சபி கான் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இந்த மாத இறுதியில் பொறுப்பேற்பார் என்று கூறப்படுகிறது. தற்போது தலைமை அதிகாரியாக உள்ள வில்லியம்ஸ் ஓய்வு பெறும் வரை ஆப்பிள் வாட்ச் உற்பத்தியை சபி கான் மேற்பார்வையிடுகிறார்.
இவர் உத்திர பிரதேசத்தில் பிறந்து, சிங்கப்பூரில் கல்வி கற்று தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார். இவர் கடந்த 30 ஆண்டுகளாக ஆப்பிள் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். தற்போது இவர் அந்நிறுவனத்தின் துணை தலைவராக வகித்து வருகிறார்.