
இந்தியா- இங்கிலாந்து அணிக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதற்காக இங்கிலாந்து அணியினர் இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளனர். இந்தத் தொடரின் முதல் போட்டி முடிவடைந்த நிலையில் அதில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதனை அடுத்து இரு அணிகளும் நேற்று இரண்டவது ஒருநாள் போட்டியில் விளையாடியது.
இந்தப் போட்டியில் முதலில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங் செய்தது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்த அணி 50 ஓவர்களில் 304 ரன்கள் எடுத்துள்ளது. இதனை அடுத்து களம் இறங்கிய இந்திய அணி 44.3 ஓவர்களில் 308 ரன்கள் எடுத்து தொடரை கைப்பற்றியது. இதனால் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 300 ரன்கள் அடித்தும் அதிக தோல்வியை தழுவிய அணி என்ற மோசமான சாதனையை இங்கிலாந்த அணி படைத்தது.
இதுவரை இங்கிலாந்து அணி 99 போட்டிகளில் 300க்கும் அதிகமான ரன்களை குவித்துள்ளது. அதில் 28 போட்டிகளில் தோல்வியை அடைந்துள்ளது. மோசமான சாதனை பட்டியலில் இரண்டாவது இடத்தில் இந்திய அணி உள்ளது. அதாவது 136 போட்டிகளில் 300க்கும் அதிகமான ரண்களை குவித்தும் 27 போட்டிகளில் இந்திய அணி தோல்வியை பெற்றுள்ளது.