
சாஹல் உலக கோப்பை அணியில் இல்லாத நிலையில், அவரது மனைவி தனஸ்ரீ வர்மா 2023 உலக கோப்பை கீதத்தில் டான்ஸ் ஆடியுள்ளது ட்ரோல் ஆகி வருகிறது
அதிகம் எதிர்பார்க்கப்படும் 2023 ஒருநாள் உலகக் கோப்பை போட்டி இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ளது. இந்த பெரும் தொடர் அக்டோபர் 5ஆம் தேதி முதல் இந்தியாவில்தொடங்கவுள்ளது. ஏறக்குறைய அனைத்து நாடுகளும் இந்த போட்டிக்கான அணிகளை ஏற்கனவே அறிவித்துள்ளன. ரோஹித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட உலகக் கோப்பை அணியையும் பிசிசிஐ அறிவித்துள்ளது. 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியை இந்தியா நடத்தியது அனைவரும் அறிந்ததே. அந்த உலகக் கோப்பையின் போது ஷங்கர் மகாதேவன் பாடிய உலகக் கோப்பை கீதம் எவ்வளவு பெரிய ஹிட் ஆனது என்பது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் மீண்டும் இந்த முறை உலகக் கோப்பையை இந்தியா நடத்தும் நிலையில், உலகக் கோப்பைக்கான தீம் பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. நேற்று ஐசிசி வெளியிட்டது. ஓடும் எக்ஸ்பிரஸ் தீமில் ரன்வீர் சிங்கின் நடனத்துடன் கூடிய பாடல் ஹிட் ஆனது. இந்த பாடலில் இந்திய கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹலின் மனைவியின் தோற்றம் சிறப்பு ஈர்ப்பாக அமைந்தது.
இந்தப் பாடலுக்கு ப்ரீதம் இசையமைத்துள்ளார். ஷ்லோக் லால் மற்றும் சவேரி வர்மா பாடல் வரிகளை இயற்றியுள்ளனர். ப்ரீதம், நகாஷ் அஜீஸ், ஸ்ரீ ராம சந்திரா, அமித் மிஸ்ரா, ஜோனிதா காந்தி, அகாசா, சரண் ஆகியோர் பாடியுள்ளனர். சரண் ராப் எழுதினார். இது ஒருபுறம் இருக்க யுஸ்வேந்திர சாஹல் உலக கோப்பை அணியில் இல்லாத நிலையில், அவரது மனைவி தனஸ்ரீ வர்மா 2023 உலக கோப்பை கீதத்தில் டான்ஸ் ஆடியுள்ளது ட்ரோல் ஆகி வருகிறது. இதற்கு பலரும் பலவிதமான கமெண்ட் செய்து வருகின்றனர்.
முன்னதாக சாஹல் 2023 ஆசிய கோப்பை மற்றும் 2023 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெறவில்லை. இருப்பினும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரிலாவது அவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிலும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதற்கிடையே சாஹல் கவுண்டி சாம்பியன்ஷிப் 2023ல் கென்ட் அணிக்காக ஆடி வருகிறார்.
DIL JASHN BOLE! #CWC23
Official Anthem arriving now on platform 2023 📢📢
Board the One Day Xpress and join the greatest cricket Jashn ever! 🚂🥳
Credits:
Music – Pritam
Lyrics – Shloke Lal, Saaveri Verma
Singers – Pritam, Nakash Aziz, Sreerama Chandra, Amit Mishra, Jonita… pic.twitter.com/09AK5B8STG— ICC (@ICC) September 20, 2023
Justice for Chahal! 🫠#YuziChahal #Dhanashree #ICCWorldCup2023 https://t.co/Qe45sDBtTc
— Sneहाहाहा😂 (@__Sn_e_ha__) September 20, 2023
https://twitter.com/sumanthatluri/status/1704293187517665468
Dhanashree has contributed more to the WC in the last 3 WCs combined than Chahal,
— Ash (@pikachuwala) September 20, 2023
Meet Dhanashree Verma Chahal.
Wife of star cricketer Yuzvendra Chahal. He is most wicket taking bowler in the history of IPL.
Dhanashree got her recognition after marrying Chahal. No one knew her before then. Chahal buys her Gucci bags.
Today she got featured in the World… pic.twitter.com/dVp0JWfobR
— Azy (@Azycontroll_) September 20, 2023
Even Dhanashree Verma will be part of the world cup at some point but yuzi chahal 😭😭😭🔔
— Cricfacts💯 (@Slafe8) September 19, 2023
Chahal & Dhanashree watching the 2023 World Cup Anthem pic.twitter.com/IHGxml09mW
— Sagar (@sagarcasm) September 20, 2023
– Yuzvendra Chahal not in World Cup squad
– Dhanashree in World Cup songSuch is life. 🤦🏻♂️ pic.twitter.com/EOsQdr3mAc
— Saif Ahmed 🇧🇩 (@saifahmed75) September 20, 2023
Chahal Appearance In Last 4 Year In World Cup – 0
Dhanashree Appearance – 1
Saap paal rahka tha yuzi bhai ne🐍😂#CWC23 #CricketWorldCup2023 #INDvsAUS pic.twitter.com/hBfogUXQLl
— Ziyad (@Ziyad69_) September 20, 2023