திமுக இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், உழைத்தால் யாரும் முன்னேறலாம் என்பதற்கு நம்முடைய கழக இளைஞர் அணியே ஒரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களால்,  உழைப்பு என்றால் ஸ்டாலின் ?  ஸ்டாலின் என்றால் உழைப்பு ? என்ற பாராட்டை பெற்றவர் நம்முடைய இயக்கத்தினுடைய இளைஞர் அணியை துவக்கிய  கழக தலைவர் அவர்கள்…

இன்றைக்கு நம்முடைய தலைவர் அவர்கள் முதலமைச்சராக வந்திருக்கிறார் என்றால்,  சாதாரண உழைப்பா? படிப்படியாக உழைத்து தான் இந்த நிலைக்கு நம்முடைய தலைவர் அவர்கள் வந்திருக்கிறார்கள். இதை நீங்கள் உணர வேண்டும்.  உங்களுக்கு தெரிய வேண்டும்..  அந்த வரலாறு எல்லாம் தெரிய வேண்டும்.  1967ஆம் ஆண்டு நம்முடைய தலைவர் அவர்கள்,  14வது வயதில் கோபாலபுரத்தில் இளைஞர் திமுகவை துவங்கினார். எங்கு தெரியுமா ? ஒரு சலூன் கடையில்…

1968 ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சி தேர்தலுக்காக சைக்கிள் எடுத்துக் கொண்டு… வீதி வீதியாக பிரச்சாரத்தை மேற்கொண்டார்  நம்முடைய தலைவர் அவர்கள்…. அதன் பிறகு 1969ஆம் ஆண்டு சென்னை மாவட்டத்தின் உடைய வார்டு பிரதிநிதி. 1973ஆம் ஆண்டு திமுகவின் உடைய பொதுக்குழு உறுப்பினர்,  1976ஆம் ஆண்டு மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டு,  ஓராண்டு சிறை தண்டனை…  அதன் பிறகு 1980ஆம் ஆண்டு நம்முடைய இளைஞரனி துவங்கப்பட்ட ஆண்டு 1980 ஆம் ஆண்டு….

அப்போது தலைவர் கலைஞர் அறிவித்த 7 பேரில் ஒரு செயலாளர் நம்முடைய தலைவர் அவர்கள்…  அதன் பிறகு தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து,  இளைஞர் அணியை வளர்த்து…. தலைவருடைய கால்கள் படாத கிராமமே இல்லை என்று சொல்லலாம்….. 1983 ஆம் ஆண்டு திமுகவினுடைய மாநில இளைஞரணி செயலாளராக பொறுப்பு உயர்வு கொடுக்கப்பட்டது தலைவர் அவர்களுக்கு…  2006 ஆம் ஆண்டு உள்ளாட்சித் துறை அமைச்சர்,  2008இல் கழகத்தினுடைய பொருளாளர்,

2009 ஆம் ஆண்டில் துணை முதலமைச்சர், 2016இல்  சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர்,  2017ஆம் ஆண்டு கழகத்தினுடைய செயல் தலைவர்,  2018ஆம் ஆண்டு கலைஞர் மறைவுக்கு பின் கழகத்தினுடைய ஒரே தலைவர்,  2021இல் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட… தமிழ்நாட்டினுடைய முதலமைச்சர்….. நம்முடைய தலைவர் அவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர்…..  யாருடைய காலை பிடித்தும்  முதலமைச்சர் ஆக வில்லை  அதை நீங்கள் உணர வேண்டும் என தெரிவித்தார்.