
செய்தியாளர்களிடம் பேசிய கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், நாடு முழுவதும் எந்தெந்த தொகுதிகளில் எல்லாம் வாய்ப்பு இருக்கிறதோ, அங்கு நாங்கள் முன்னிறுத்த வேண்டாம். ஒன்று மக்களே முன் நிறுத்திக் கொள்கிறார்கள் அல்லது கட்சி வந்து அதை புரிந்துகொண்டு, கட்சி முக்கியத்துவம் தருகிறது. கட்சியிலே ஒவ்வொரு முறை தேர்தல் உடைய நேரத்திலே வேட்பாளர் தேர்வு நடைபெறுகின்ற போது..
நானும் அந்த தேர்தல் குழுவில் இருக்கின்ற காரணத்தினால் பார்க்கிறோம்.. கட்சி எந்த அளவுக்கு மகளிர் வேட்பாளருக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது என்பதை ஒரு மகளிர் அணி தலைவராகவும், அதிகமான மகளிர் இந்த தேர்தலிலே வேட்பாளராக பங்கேற்பதை எங்களுடைய தரப்பில் இருந்து நாங்கள் கோரிக்கை வைப்போம். அதற்கென்று தகுதியான மகளிர் வேட்பாளர்களை உருவாக்குவதும் எங்களுடைய கடமை, அந்த பணியையும் செய்து கொண்டிருக்கிறோம்.
தமிழ் மாநில காங்கிரஸின் தலைவர் திரு.ஜி கே வாசன் அவர்கள் தேசிய ஜனநாயக கூட்டணியிலே இருந்தது இருந்து கொண்டிருக்கிறார். உங்கள் எல்லாருக்கும் தெரியும். ஒரு தலைவர் அந்த கட்சியிலே இன்னொரு தலைவரை போய் பார்ப்பது என்பதில் யார், யாருக்கு தூது ? இரண்டாவது பிஜேபி கட்சியில் ஒருத்தரை தூது அனுப்பறாங்க, பேசி அனுப்புறாங்கன்னா.. அந்த கட்சி எந்த தகவலை, யாருக்கு சொல்லுது என்பது கட்சிக்கு தான் தெரியும்.மீதி யாருக்கும் சொல்ல முடியாது என தெரிவித்தார்.