
கர்நாடக மாநிலம் சோலாப்பூரில் பஞ்சாப் ஷரி சாமி (37) என்பவர் வசித்து வருகிறார். இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர். அதோடு அவரிடமிருந்து 181 கிராம் தங்க கட்டிகள், 333 கிராம் வெள்ளி பொருட்கள், தங்கத்தை உருக்க பயன்படுத்தப்படும் கம்பி மற்றும் ஒரு துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவருக்கு திருமணமாகி மனைவியும், ஒரு குழந்தையும் உள்ளனர். இவர் கடந்த 2003ம் ஆண்டிலிருந்து திருட தொடங்கியுள்ளார். அதோடு பல்வேறு வீடுகளில் நகை மற்றும் பணங்களை திருடி ஆடம்பரமாக வாழ்ந்துள்ளார்.
இந்நிலையில் மகாராஷ்டிராவை சேர்ந்த ஒரு நடிகைக்கும், இவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் நடிகைக்காக கோடிக்கணக்கில் செலவு செய்துள்ளார். அதன் பின் கடந்த 2016ம் ஆண்டு கொல்கத்தாவை சேர்ந்த இளம் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த இளம் பெண்ணுக்கு மூன்று கோடியில் சொகுசு வீடு ஒன்றை கட்டிக் கொடுத்துள்ளார். அதோடு காதலியின் பிறந்தநாளுக்கு ரூ.22 லட்சம் மதிப்புள்ள பரிசையும் வாங்கி கொடுத்துள்ளார். இந்நிலையில் கடந்த 2016ம் ஆண்டு திருட்டு வழக்கில் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். அதன் பின், 6 ஆண்டுகள் கழித்து வெளியே வந்த இவர் மீண்டும் திருட ஆரம்பித்துள்ளார்.
இவர் மகாராஷ்டிரா, குஜராத், தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் கைவரிசை காட்டி, இவர் மீது 180 வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவர் தான் திருடும் நகைகளை உருக்கி விற்றுள்ளார். ஒரு வீட்டிற்குள் சென்று திருடிவிட்டு, பின்னர் வெளியே வந்ததும் தனது உடையை மாற்றிக் கொண்டு தப்பியுள்ளார். இவர் கராத்தேயில் கருப்பு பெல்ட்டும் வாங்கியுள்ளார் அவரது காதலியிடமும் விசாரணை நடத்த உள்ளோம் அவரிடம் இருக்கும் மீதம் உள்ள நகைகளையும் கைப்பற்ற முடிவு செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்