
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் 2025 காண சாம்பியன் டிராபி போட்டியானது பாகிஸ்தானில் நடைபெற வேண்டும். ஆனால் பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன் டிராபிக் இந்தியா பங்கேற்கவில்லை என ஏற்கனவே அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதேநேரம் பாகிஸ்தான் போட்டிய வேறு எங்கும் மாற்றக்கூடாது என நிபந்தனை விதித்துள்ளது. இந்த நிலையில் ஐசிசி எந்த முடிவை எடுப்பது என குழம்பி உள்ளது.
இதுகுறித்து சோயித் அக்தர் கூறியதாவது, இந்திய அணி பாகிஸ்தானில் விளையாட மறுத்தால் ஐசிசி அமைப்பிற்கும், பாகிஸ்தானுக்கும் இதனால் 844 கோடி இழப்பீடு உண்டாகும். எனவே இந்தியா பாகிஸ்தானுக்கு வருகை தந்து பாகிஸ்தானில் விளையாடி தோற்றால் அல்லது வெற்றி பெற்றால் இரண்டுமே சிறப்பானதாக அமையும். இல்லையெனில் இந்திய அணியை ஐசிசி பாகிஸ்தான் அல்லது வேறு இடங்களில் வைத்து விளையாட வைக்க முடியாவிட்டால் ஸ்பான்சர் சிப்பில் ஐசிசி மற்றும் பாகிஸ்தான் 100 மில்லியன் டாலர் (844 கோடி ரூபாய்) இழப்பீடை சந்திக்க நேரிடும்.